“#GOAT திரைப்பட கொண்டாட்டத்திற்கு கட்சிக் கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது!” நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்!

விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகயுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டங்களின் போது கட்சியின் கொடியோ, கட்சியின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. ‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து…

"Party flag, name should not be used for #GOAT image celebration" - party leadership instructs administrators!

விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகயுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டங்களின் போது கட்சியின் கொடியோ, கட்சியின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது #Bangladeshteam

இதற்கிடையே, கோட் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்குமாறு தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கோட் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சி அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணை நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் திரைப்பட கொண்டாட்டத்திற்கு கட்சியின் கொடியோ அல்லது கட்சியின் பெயரையோ கட்சி நிர்வாகிகள் பயன்படுத்தக் கூடாது என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொண்டாட்டத்திற்கு எந்த ஏற்பாடுகள் ஆனாலும் செய்து கொள்ளலாம் எனவும் மக்கள் இயக்கம் கொடியினையோ அதனுடைய பெயரையோ பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.