அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் த்ரிஷா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : “மாநில பாடத் திட்டம் குறித்து #Governor கூறிய பிழையான கருத்தைத் திரும்ப பெறவேண்டும்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலிறுத்தல்!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருக்கும் த்ரிஷா, அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்திலும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கும்போது அஜித் உடன் த்ரிஷாவும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை நடிகை த்ரிஷா கிரீடம், ஜி, மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.







