11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் அறிவித்துள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை, பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 2023-ம் ஆண்டில் தனது திருமண நாளில் தனது கணவருக்கு திருமணநாள் வாழ்த்தை வெளியிட்ட சைந்தவி, இந்த ஆண்டு அத்தகைய எந்த இடுகையையும் வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள் : ரேபரேலி தொகுதி பரப்புரை – திருமணம் எப்போது என்று கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்!
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரியபோவதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில், “11 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் ஜி.வி.யும் திருமண உறவிலிருந்து பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்களது மன நிம்மதிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதுதான் எங்களுக்கு சிறந்த முடிவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களது ஆதரவுக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி. ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் தங்களது முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதைபோல், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளபக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024








