நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியுள்ளன. மக்களவை, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலும் மாநிலங்களவை, துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தலைமையிலும் தொடங்கியுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு, சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.




