சென்னையை அடுத்த மாங்காடு பத்மாவதி நகர் 1வது தெரு பகுதியில் அடுக்குமாடி
குடியிருப்பில் கார் பார்க்கிங் தகராறில் மேல் வீட்டு பெண் கீழ் வீட்டு ஆணும் மாறி மாறி தாக்கி சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் வீட்டில் மோகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேல் வீட்டில் நித்யா (37) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் தனித்தனியே கார் பார்க்கிங் இருக்கும் நிலையில் சம்பவத்தன்று மோகனிடம் கேட்டு வேறு ஒருவர் அவருடைய பைக்கை பார்க் செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நித்யா அதை சென்று மோகன் இடம் என்னுடைய இடத்தில் நான் காரை பார்க் செய்யும்போது வேறு ஒருவர் பைக் பார்க் செய்திருந்தால் அதைக் கேட்க போனால் உங்கள் பெயரை சொல்கிறார் என்று கேட்டதற்கு மோகன் தகாத வார்த்தையால்
திட்டியதாகவும் அதன் பிறகு நித்தியா அவருடைய வீட்டிற்கு படிக்கட்டில்
ஏறிச்செல்லும் போது மோகன் உள்ளிருந்து வேகமாக கதவை திறந்தபோது மோகனின் தாயார் முகத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது.
அதற்கு என் தாய் முகத்தில் அடிப்பட நீ தான் காரணம் என்று நித்யாவை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் மாறி மாறி செருப்பை தூக்கி வீசி கொண்டும், பின்பு மோகன் படிக்கட்டு ஏறி சென்று நித்யாவின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து வரும் காட்சியும் அவர் கையை வைத்து அவர் முகத்திலேயே அடிக்கும் காட்சியும் தப்பிக்க் நித்தியா காலால் எட்டி உதைக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது மாங்காடு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுங்கள் என்று இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ காட்சியானது வைரலாக பரவி வருகிறது.








