உதகையில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி மையம் மற்றும் உதகை ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த நாளை உதகை செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 9 மாவட்டங்களிலிருந்து ஆயிரத்து 300 காவலர்கள் உதகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் நாளை பிற்பகலில் உதகைக்கு வருவதையொட்டி உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முதல் ராஜ்பவன் வரையிலும் மற்றும் ராஜ்பவன் முதல் ராணுவ பயிற்சி மையம் வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது உதகை நகர் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.








