தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் தற்போது ஹைட்ரோகார்பன் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் வேளாண் மக்களின் நன்மைக்காக
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. எனவே தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யும் எண்ணம் உள்ளதா? என தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுதுபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ரமேஷ் தெலி, நாடு முழுவதும் சிறிய அளவிலான எரிவாயு கிணறுகளை கண்டறிவது தொடர்பாக 32 பகுகளில் அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் மூலம் 75 இடங்களில் 13,204 சதுர கிலோமீட்டர் அளவுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க தேர்வு செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் புதுகோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 இடங்களில் பெட்ரோலிய கிணறுகள் தோண்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த பகுதிகளிலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவில்லை எனவும் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.








