‘கொட்டும் பனிக்கு நடுவே தபேலா’ – தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் பதிவு..

தொழிலதிபர்  ஹர்ஷ் கோயங்கா கொட்டும் பனியின் நடுவில் அமர்ந்து ஒருவர் தபேலா வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது சமூகவலைதளப் பக்கத்தில்…

தொழிலதிபர்  ஹர்ஷ் கோயங்கா கொட்டும் பனியின் நடுவில் அமர்ந்து ஒருவர் தபேலா வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவ்வப்போது சில கருத்துகளை கொண்ட வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.  அவரது கருத்துகள் பெரும்பாலும் வரவேற்பைப் பெறும். இந்நிலையில், தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், உறைய வைக்கும் பனியின் நடுவே ஒருவர் அமர்ந்து ‘மஹியே ஜின்னா சோனாவா’ என்ற பாடலுக்கு தபேலா வாசிக்கிறார்.

https://twitter.com/hvgoenka/status/1757416976345915447

பனியில் தபேலா என குறிப்பிட்டு பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பதிவிற்கு மக்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகள்;

  • அழகு
  • தபேலாவின் தாளத்தால் பனியினை உடையுங்கள்
  • கூல் பீட்ஸ்..பீட் த கோல்ட்
  • வா தாஜ்
  • ஆனந்தமாக உள்ளது

என பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.