மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்!

மயிலம் முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை  அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில்…

மயிலம் முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை  அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை
சுப்பரமணியர் சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா வெகு
விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  இந்த நிலையில், இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.   முதலில் விநாயகர் தேரோட்டம் தொடங்கிய பின், வள்ளி தெய்வானை சுப்பிரமணி முருகன் தேரோட்டம் நடைபெற்றது.  இதில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரானது மலை மேல் அமைந்துள்ள முருகன் சன்னதியில் ஆரம்பிக்கப்பட்டு மலையினை சுற்றி வந்து மீண்டும் வாயிலில் முடிவுற்றது.  தேரோட்டம் முடிந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தங்க கவசம் பொருத்தப்பட்ட வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி முருகனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், மொட்டையடித்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.  இதில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.