சென்னை பள்ளிக்கரணையில் மக்கள் நீதி மையம் கட்சியின் மாணவர் அணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
மாணவர் அணியின் சங்கர் ரவி தலைமையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் இளைஞர்களின் கல்வி தகுதிக்கேற்ப நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அணியின் பொது செயலாளர் அருணாசலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு தளமாக மக்கள் நீதி மையம் உருவாக்கி தந்துள்ளதாகவும், மக்கள் நீதி மையம் சார்பில் சட்ட மன்ற தொகுதி வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக 7 சதவீதமாக வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றும் , வேலை வாய்ப்பு என்பது அடிப்படை உரிமையாக உருவாக்கி தருவதே மக்கள் நீதி மையத்தின் நோக்கமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
—கோ.சிவசங்கரன்







