நெல் கொள்முதல் முறைகேடு; 56 பேர் மீது நடவடிக்கை

நெல் கொள்முதல் முறைகேட்டில் ஈடுப்பட்ட 56 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் காணையிலுள்ள திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் விவசாயிகளுக்கு காலதாமதம்…

நெல் கொள்முதல் முறைகேட்டில் ஈடுப்பட்ட 56 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் காணையிலுள்ள திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி பெறுவது மற்றும் வியாபாரிகள் குறுக்கீடு உள்ளதா என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடைபெற கூடாது என்பதற்கான அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 45 லட்சக் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு இதுவரை 35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சன்ன ரகத்திற்கு 70 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு அதிகளவு மழை பெய்தததின் காரணமாக டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற மாவங்களிலும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், ரேஷன் அரிசியில் கருப்போ, பழுப்பு நிறமோ இருக்க கூடாது என்பதற்காக 600 மாடர்ன் ரைஸ் மில் முகர்வர்கள் இணைந்து உள்ளதாகவும், தமிழகத்தில் 21அரசு மாடர்ன் ரைஸ் மில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி குடும்ப அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் இதுவரை 11 லட்சத்து 47 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 56 பேர் மீது நடவடிக்கை
எடுக்கபட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 78 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாகவும், நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் வரக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.