திருச்செந்துார் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவு – மீன் குழம்பு சாப்பிட்டு விரதத்தை முடித்த பக்தர்கள்!

திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவடைந்தது. பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டு அவர்களது விரதத்தை முடித்துக்கொண்டனர். உலக புகழ் பெற்ற…

திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவடைந்தது. பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டு அவர்களது விரதத்தை முடித்துக்கொண்டனர்.
உலக புகழ் பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகன் அவதரித்த நட்சத்திரமான விசாக நட்சத்திரமே வைகாசி விசாக திருவிழாவாக மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று வைகாசி விசாகம் முடிவு பெற்றது. நேற்று கோவில் வளாகத்தில் பாதயாத்திரை வந்த பல்வேறு குடும்பத்தினர் மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடித்தனர்.
—அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.