ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கயான் மாவட்டத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் சுமார் 255 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 155 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந்த தகவலை தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்டிகா பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் தொடர்ந்து இம்மாதிரியான நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் முதன் முதலாக எதிர்கொள்ளும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். இதன் காரணமாக மக்களை பாதிப்புகளிலிருந்து மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பக்டிகா பகுதியில் 90 வீடுகள் முற்றிலுமாக இடிந்து நாசமாகியுள்ளன. இதனால் இடிபாடுகளில் பலர் உயிருடன் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பக்டிகா உள்ளிட்ட 4 மாவட்டங்களை நிலநடுக்கம் பாதித்துள்ளது. விபத்து ஏற்பட்ட இந்த பகுதிகளுக்கு உடனடியாக மீட்பு தொண்டு நிறுவனங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென தலிபான் அரசின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.