சாப்பாடு ஊட்டிவிட முயன்றபோது ஏற்றபட்ட தகறாரில் கீழே தள்ளிவிட்டதில் தந்தை உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கணேஷபுரம் பகுதியை சேர்ந்தவர் பூதலிங்கம்(90) என்ற முதியவர். இவருக்கு ஐந்து வாரிசுகள் உள்ளார்கள். இந்நிலையில் இன்று முதியவரின் ஐந்து வாரிசுகளில் ஒருவரான சுப்பையா(48) என்பவர் மது போதையில் தந்தைக்கு கோழி கறியும் சாதமும் ஊட்டி விட முயன்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் முதியவர் சாப்பிட மறுத்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தையை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் முதியவரான தந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. முதியவர் இறந்ததை கண்ட பிற வாரிசுகள் தங்கள் தந்தையை, சுப்பையா கீழே தள்ளி விட்டு கொலை செய்து விட்டதாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்கள்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் முதியவரின் உடலை கைப்பற்றியதோடு தந்தையை கொலை செய்ததாக கூறப்பட்ட மகன் சுப்பையாவை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.