ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியில் கோடிக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதாக தெரிவிக்கும் நிலையில், நிலவரம் என்ன? என்பது குறித்த தகவலை இந்த தொகுப்பில் காணலாம்….
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் துணை ஆசிரியர் தேவா இக்னேசியஸ் சிரில் கூறும் தகவலை இங்கே காணலாம்….
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு அரசியல் கட்சி தொடங்குவதற்கு 18 வயதை பூர்த்தி அடைந்த 100 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 18 வயது பூர்த்தியான வாக்காளர்களை கட்சிகள் இணைத்து வருகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 இல் வெளியிடப்பட்ட போது தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கபட்டது. பெயர் சேர்த்தல், நீக்குதலுக்குப் பிறகு தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை 6.12 கோடியாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் 1.90 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேபோல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் தற்போது 4 மடங்காக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கட்சியின் 44 ஆவது ஆண்டு விழாவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இப்படி இந்த 3 கட்சிகளும் தங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளில் உறுப்பினர்கள் எத்தனை? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், 6.11 கோடி வாக்காளர்களில் 3.90 கோடிபேர் திமுக, அதிமுகவில் உள்ள போது, 2.21 கோடி பேரில் கட்சிகளின் உறுப்பினர்களாக உள்ளவர் எத்தனை பேர்? கட்சிகளைச் சாராதவரகள் எத்தனை பேர்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா