‘சக்தி திருமகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சக்தி திருமகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 19ல் வெளியான படம் சக்தி திருமகன்.  விஜய் ஆண்டனியே தயாரித்த இப்படத்தை அருண் பிரபு இயக்கியிருந்தார். இது விஜய் ஆண்டனியின் 25 அவது படமாகும்.

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் திரிப்தி ரவீந்திரா,செல்முருகன், வாகை சந்திர சேகர் ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஊழலுக்கு எதிரான அரசியல் கதைக்களத்துடன் வெளியாகிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 24ந் தேதி ஜியோ ஹாஸ்டாரில் வெளியாகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.