ஜப்பான் ஒசாகா தமிழ் சங்கத்தின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படமும், சிறந்த நடிகராக மாஸ்டர் படத்துக்காக நடிகர் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களுக்கு ஒசாக்கா சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படமும், சிறந்த நடிகராக மாஸ்டர் படத்துக்காக நடிகர் விஜய்க்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஜெய்பீம், மண்டேலா, டாக்டர், மாநாடு
போன்ற பல படங்களும் பல்வேறு விருதுகளுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முழு விருது பட்டியல் விவரம் :
சிறந்த படம் – சார்பட்டா பரம்பரை
சிறந்த நடிகர் – விஜய் (மாஸ்டர்)
சிறந்த நடிகை – கங்கனா ரனாவத் (தலைவி)
சிறந்த இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா (மாநாடு)
சிறந்த ஒளிப்பதிவாளர் – தேனீ ஈஸ்வர் (கர்ணன்)
சிறந்த இயக்குனர் – பா ரஞ்சித் (சார்பட்டா பரம்பரை)
சிறந்த திரைக்கதை – வெங்கட் பிரபு (மாநாடு)
சிறந்த தயாரிப்பு நிறுவனம் – ஒய் நாட் ஸ்டுடியோஸ் (மண்டேலா)
சிறந்த நடன பயிற்சியாளர் – தினேஷ்குமார் (மாஸ்டர் – வாத்தி கம்மிங் பாடல்)
சிறந்த துணை நடிகர் – மணிகண்டன் (ஜெய் பீம்)
சிறந்த துணை நடிகை – லிஜோ மோல் ஜோஸ் (ஜெய் பீம்)
சிறந்த காமெடியன் – ரெடின் கிங்ஸ்லி (டாக்டர்)
சிறந்த வில்லன் – விஜய் சேதுபதி (மாஸ்டர்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஜாரா வினீத் (டாக்டர்)
சிறந்த படத்தொகுப்பு – பிரவீன் கே.எல் (மாநாடு)
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – திலீப் சுப்பராயன் (சுல்தான்)
சிறந்த VFX – நெக்ஸ்ஜென் மீடியா (டெடி)
சிறந்த ஆட் டைரக்டர் – ராமலிங்கம் (சார்பட்டா பரம்பரை)
சிறந்த சவுண்ட் டிசைனர் – டி.உதய் குமார் (அரண்மனை 3)
கூர்ந்து கவனிக்கப்பட்ட முக்கிய படம் – மண்டேலா
https://twitter.com/osaka_tamil/status/1660243381812076544?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








