தோனியிடம் இருந்து மற்றொரு இன்னிங்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்: ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள தோனிக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டி நிலத்தை உழும்…

மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள தோனிக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டி நிலத்தை உழும் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மகேந்திர சிங் தோனியின் ஆர்வம் இயற்கை விவசாயத்தின் பக்கம் சென்றது. ராஞ்சியின் புறநகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் நிலத்தை உழுது, டிராக்டரில் சவாரி செய்யும் வீடியோவை தோனினியே தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தார்.

இயற்கை விவசாயத்தின் ஆர்வம் கொண்ட தோனி 8 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டரை ஒன்றையும் வாங்கினார். . இதனிடையே மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா,தோனியின் டிராக்டர் தேர்வை பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்வராஜ் டிராக்டரின் விளம்பர தூதராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்திரா குடும்பம் சார்பாக டோனியை வரவேற்கிறேன். அவரிடம் இருந்து மேலும் ஒரு (விவசாயம்) இன்னிங்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். மகி மற்றும் மகேந்திரா என்ற பெயர் ஒற்றுமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.