கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த உத்தரவு

முன்னாள் மாணவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்தும் படி தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, முன்னாள் மாணவர்களின்…

முன்னாள் மாணவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்தும் படி தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், முன்னாள் மாணவர்கள் சங்கம் இல்லாத கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உடனடியாக முன்னாள் மாணவர் சங்கத்தைத் தொடங்கிடவும், சங்கம் இருந்தும் செயல்படாமல் உள்ள கல்லூரிகளில், அதை புதுப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், அனைத்து முன்னாள் மாணவர்களும், இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக உரிய நடவடிக்கை எடுக்க கலைக் கல்லூரி முதல்வர்களுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், முன்னாள் மாணவர் சங்கம் அமைக்கும் பணி மற்றும் புதுப்பிக்கும் பணியை வரும் 30-ஆம் தேதிக்குள் முடிக்கவும் கெடு விதிக்கப்படுள்ளது.

அண்மைச் செய்தி: இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 

கல்லூரி மேம்பாட்டுக்கு நிதிப்பற்றாக்குறை தடையாக இருப்பதாகவும், வரும் காலங்களில் நிதிநிலையை கொண்டு, படிப்படியாக கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்ச்சியாக பதிவு செய்து வரும் நிலையில், தற்போது கலைக் கல்லூரிகளை முன்னாள் மாணவர்களைக் கொண்டு மேம்படுத்திட தமிழக கல்லூரிக்கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  • சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.