தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயர்த்த கருத்துரு கோரி உத்தரவு

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி…

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் உள்ள பள்ளி, வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொண்டு, தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 201ன்படி தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகளை கண்டறிந்து சார்ந்த கருத்துருக்களை GIS வரைபடத்துடன் 06.012023 க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது.

புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி சார்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை (GIS map) வரைபடத்துடன் அளிக்கப்பட வேண்டும். (அருகாமையில் உள்ள பள்ளிகளின் விவரங்களுடன்) மேலும், புவியியல் தகவல் முறைமையை பயன்படுத்தி தேவையின் அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வள மையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரையும் (ACCESS & GIS) ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நடுநிலைப் பள்ளியாகத் நாம் உயர்த்தப்பட வெண்டிய பள்ளிக்கு கட்டட வசதி, கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். புதிய தொடக்கப் பள்ளி துவங்கும்பட்சத்தில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இருத்தல் வேண்டும்.

தங்களது மாவட்டத்தில் புதிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் ஏதும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.