தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. 250- க்கும் அதிகமானோர் விருப்பமனுக்களை பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் போட்டியிட முன்னாள் எம். எல். ஏ கோவை தங்கம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
விடியல் சேகர் காங்கேயம் தொகுதியிலும், யுவராஜ் ஈரோடு மேற்கு தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தனர்.







