இந்தியா அணி அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து…

இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, அக்சர் பட்டேல், அஸ்வின் பந்துவீச்சில் 112 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில், 3விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இரண்டாவது நாளாக விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

கேப்டன் ஜோரூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, 30.3 ஓவர்களில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.