முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பஞ்சாபில் 400 ‘ஆம் ஆத்மி’ மருத்துவமனைகள் தொடக்கம் – எதிர்க்கட்சிகள் சாடல்

பஞ்சாபில் அரசு மருத்துவமனைகளின் பெயர்களை ஆம் ஆத்மி மருத்துவமனைகள் என பெயர் மாற்றியதை எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் நேற்று 400 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை திறந்துவைத்தனர். இதன் மூலம் பஞ்சாபில் அரசு மருத்துவமனைகளின் எண்னிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அர்விந்த் கெஜ்ரிவால் பேசுகையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற 10 மாதங்களில் 500 மருத்துவமனைகளை திறந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த 500 மருத்துவமனைகள் போன்று மக்களுக்கு இன்னும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஆனால், ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த மருத்துவமனைகளை பெயரை மாற்றி ’ஆம் ஆத்மி’ மருத்துவமனைகள் என்று திறந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் அரசியலுக்காக இதை செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த மருத்துவமனைகள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் போல் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஏற்கெனவே பஞ்சாபில் திறன் வாய்ந்த சுகாதார கட்டமைப்பு உள்ளது. புதிய மருத்துவமனைகளை திறக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே இருந்த மருத்துவமனைகளுக்கு கட்சி பெயரை வைத்து முறைகேடானது என்று அம்ரிந்தர் குற்றம் சாட்டியுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram