மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர் – இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

17ஆவது ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதன் மூலம் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”விளையாட்டு மைதானத்திலும்  ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் – இந்தியா வெற்றி. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.