ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம் : தமிழ்நாடு டிஜிபி அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சா வேட்டை 4.0 தொடங்கியுள்ளதாக காவல்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சா வேட்டை 4.0 தொடங்கியுள்ளதாக காவல்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

” கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில்  கடந்த  06.12.2021 முதல் 31.12.2021 வரை “கஞ்சா வேட்டை”  நடைபெற்றது. இதனையடுத்து, “கஞ்சா வேட்டை 2.0″  கடந்த 28.03.2022 முதல் 27.04.2022  வரையிலும் அதேபோல கஞ்சா வேட்டை 3.0” 12.12.2022 முதல் 31.12.2023 வரை நடைபெற்றது.

இந்த கஞ்சா வேட்டையின் மூலம்  தமிழ்நாட்டில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில், 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக  25 ஆயிரத்து 721 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்  இத்தொழிலில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 723 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் 30.04.2023 இரவு முதல்
தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையில், இன்று (01.05.2023) அதிகாலை தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட குன்றத்தூரில் வாகன சோதனையின்போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 22 டன் குட்கா கைப்பற்றப்பட்டு, கடத்தலுக்கு
பயன்படுத்தப்பட்ட 3 ஈச்சர் வேன்கள் மற்றும் 4 டாடா ஏஸ் வண்டிகள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. போலீசாரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய
நபர்களை  கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை
தீவிரப்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி 044-28447701 என்ற தொலைபேசி
எண்ணிலும், tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள்
தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த இரகசியம்
காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும்”  என காவல்துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.