கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கோவையில் முதற்கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இரவு நேர பாடசாலை திட்டத்தை துவக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தும் விதமாக
பல்வேறு சேவை பணிகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் பட்டினி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்ட மூலம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
சமீபத்தில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து நடிகர் விஜய் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பரிசுகளை வழங்கினார்.
.இதனை தொடர்ந்து அன்மையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் உடன் ஆலோசனை மேற்கொண்டு இரவு நேர பாடசாலை தொடங்க நடிகர் விஜய்
முடிவு செய்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக கோவை எட்டிமடை பகுதியில் காமராசர்
பிறந்த நாள் வாரத்தை முன்னிட்டு இரவு நேர பாடசாலை திட்டத்தை விஜய் மக்கள்
இயக்கத்தின் தெற்கு மாவட்ட தலைவர் விக்கி துவக்கியுள்ளார்.
இந்த திட்டம் மூலம் அப்பகுதியில் உள்ள கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்கின்றனர். இதன் மாவட்ட முழுவதும் இந்த திட்டத்தை துவக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன் செலவுகளை அனைத்தும் விஜய் மக்கள் இயக்கமே பொறுப்பேற்று கொண்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் இரவு நேர பாடசாலை திட்டத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வரவேற்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









