புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி மகனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு?

மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர்  உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் அவரது மகனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி புற்றுநோயால்…

மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர்  உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் அவரது மகனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் காலமானார்.
கேரள முதலமைச்சராக (2004-06) மற்றும் (2011-16) இரு முறை பதவி வகித்தவர் உம்மன் சாண்டி. 2006 முதல் 2011 வரை கேரள சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1970ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் (1970, 1977, 1980, 1982, 1987, 1991, 1996, 2001, 2006, 2011,2016 2021)சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

உம்மன் சாண்டி மறைவைத்தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதியில் நடத்தப்படும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உமன் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், உம்மன் சாண்டியின் குடும்பத்தில் இருந்து ஒருவரை புதுப்பள்ளி தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.