அவதூறு வழக்கில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் விஏடி கலிவரதனை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி ஏ டி
கலிவரதன் பதவி வகித்து வருகிறார். இவர் நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் பேசுவதாக கூறி சொந்த கட்சியினரே விழுப்புரத்தில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசை கண்டித்து விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் சாலாமேட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி ஏ டி கலிவரதன்
கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி , அமைச்சர் பொன்முடி, கனிமொழி குறித்து அவதூறாக
பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திமுக நகர துணை செயலாளர் சித்ரா அளித்த புகாரின் பேரில் கலிவரதன் மீது விக்கிரவாண்டி போலீசார் அவதூறாக பேசியதாக வழக்குப் பதிவு செய்தனர். 153,504, 505 (1) C ,ipc r/w 4 OF TNHW actவதந்திகளை பரப்புவது,கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைப்பது, பெண்களை தவறாக பேசுவது ஆகிய பிரிவுகளின் கீழ்,வழக்குப் பதிவு செய்து போலீசார் கலிவரதனை இன்று அதிகாலை கைது செய்தனர்.







