முக்கியச் செய்திகள் தமிழகம்

2001- 02 கல்வியாண்டிலிருந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பளித்த அண்ணா பல்கலைக்கழகம்

2001-02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

2001-02ஆம் கல்வியாண்டிற்குப் பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுதச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2ம் ஆண்டு முதல் செமஸ்டர் தொடங்கி, அதாவது 3வது செமஸ்டர் முதல் அரியர் வைத்திருப்பவர்கள் அவர்களின் அரியர்களை மீண்டு தேர்வெழுதிக் கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாகச் செலுத்த வேண்டும். Www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர்.23 முதல் டிசம்பர் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள 9 தேர்வு மையங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 25 என்ற முகவரிக்கு வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம். தேர்வு எழுதவுள்ள பாடங்களை மாணவர்கள் விண்ணப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு மலர்ந்த நாள்: கடந்து வந்த பாதை

Vandhana

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவில் முறைகேடுகள்: அமைச்சர் மூர்த்தி

EZHILARASAN D

மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Arivazhagan Chinnasamy