ஆன்லைன் கொள்முதல் திட்டம்: 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் வாயிலான நெல் கொள்முதல் திட்டத்தால் மன்னார்குடி பகுதியில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில்…

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் வாயிலான நெல் கொள்முதல் திட்டத்தால் மன்னார்குடி பகுதியில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் வாயிலாகவே நெல்லை விற்பனை செய்ய முடியும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள் பெரும்பாலானோருக்கு ஆன்லைன் நடைமுறை குறித்து எதுவும் தெரியாததால் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மன்னார்குடி அருகே உள்ள வாட்டார் கிராமத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் உள்பட பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இதனால், நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுவரை, 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது, வருத்தம் அளிப்பதாக அப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.