இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்றும் அதிகம் பேசப்படும் தமிழ் படங்களில் ஒன்றாக ‘தி லெஜண்ட்’ உள்ளது.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தி லெஜண்ட் படத்திலிருந்து வெளிவந்த மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடி வாசல் வீடியோ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் எனத் தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
https://twitter.com/yoursthelegend/status/1551242952412102656
தென்னிந்தியத் திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகிகள் பலரும் கலந்து கொண்ட தி லெஜண்ட் படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அண்மைச் செய்தி: ‘”மக்கள் சேவகராக இளையராஜா புதிய அவதாரம்”- அண்ணாமலை வாழ்த்து’
https://twitter.com/APIfilms/status/1550750292748034050
அப்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியானது. இந்நிலையில், தி லெஜண்ட் படத்தின் கன்னட டிரைலரை படக்குழு வெளியிட்டது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் அண்மையில் மிகப் பிரமாண்டமான பத்திரிக்கையாளர் சந்திப்பு துபாயில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை லெஜண்ட் சரவணன் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது எனவும், ஏபி இன்டர்நேஷனல் முழுமையான வெளிநாட்டுத் திரையரங்கு வெளியீடுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.







