ஒரு ரூபாயில் தமிழ்நாடு அரசின் வரவு, செலவு குறித்த விவரத்தை கீழே காணலாம்.
ஒரு ரூபாயில் அரசுக்கு பொதுக்கடனாக 34 பைசாவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 40 பைசாவும் வருவாய் ஆக கிடைக்கிறது. மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயில் 4 பைசாவும், கடன்களைத் திரும்பப் பெறுவது மூலம் 2 பைசாவும் வருவாய் பெறுகிறது. மத்திய அரசு வழங்கும் மானியத்தில் 11 பைசாவும், மத்திய அரசு வரியில் மாநிலத்தின் பங்காக 9 பைசாவும், அரசு வருவாயாகக் கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய் செலவைப் பொறுத்தவரை, அரசு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த 7 பைசாவும், அரசு வாங்கிய கடனுக்கான வட்டியாக 13 பைசாவும் செலவிடப்படுகிறது. கடன் வழங்குவதற்கு 2 பைசாவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 20 பைசாவும் செலவு செய்யப்படுகிறது. அதேபோல், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்களுக்காக 10 பைசாவும், செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுக்காக 4 பைசாவும் செலவிடப்படுகிறது. மானியம் மற்றும் இலவச திட்டங்களுக்காக 32 பைசாவும், மூலதன செலவாக 12 பைசாவும், அரசு செலவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







