டேங்கர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

ஓசூர் அருகே டேங்கர் லாரி மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்னுமிடத்தில் டிவிஎஸ்50 வாகனத்தில் சாலையை கடக்க…

ஓசூர் அருகே டேங்கர் லாரி மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்னுமிடத்தில் டிவிஎஸ்50 வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற சுந்தரம்(50) என்பவர் மீது டேங்கர் லாரி மோதும் விபத்து காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. பெரிய குடிபாலா கிராமத்தை சேர்ந்த சுந்தரம், விவசாய கூலி தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரி – ஒசூர் தேசிய நெடுஞ்சாலையை சாமல்பள்ளம் என்னுமிடத்தில் கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினார்.

டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரம் எதிரே இருந்த காரின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டேங்கர் லாரியை சாலையோரமாக நிறுத்தி ஓட்டுநர் தலைமறைவான நிலையில், சூளகிரி போலிசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.