அசாம் மாநிலத்தில் இரண்டு படகுகள் நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தை அடுத்து, பணியில் அலட்சியம் காட்டியதாக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்ந்தோடும் ஜோர்ஹாட் நகரையொட்டிய நிமடிகாட் பகுதியில் பயணிகளுடன் சென்ற படகுகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள் ளானது. இந்த இரண்டு படகுகளிலும் 120 பயணிகள் இருந்ததாகவும் ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 43 பேர் மீட்கப்பட்டதாகவும் ஆசிரியை ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மற்றவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரச்சி தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்புப்பணிகளை துரிதப்படுத்திட உத்தரவிட்டுள்ளதாகவும், நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக மூன்று அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள் ளனர்.








