தமிழ்நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். அப்போது, டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதார அமைப்பு, அரசு துறைகளின் அலுவலக செயல்பாடுகளை மின் மயமாக்கும் திட்டம், தரவு மையக் கொள்கை, உலகளாவிய திறன் மையக் கொள்கை உள்ளிட்டவை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மெய்நிகர் அருங்காட்சியகம், உள்ளடக்க தமிழ் மின் நூலகம், அரிய ஒளி, ஒலி ஒளிப்படம், புகைப்படங்கள் மற்றும் பிற வரலாற்று படங்களை மின் உருவாக்கம் செய்தல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
யூமாஜின் எனும் வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாடு நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.