ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு முழுவதும் 180 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் கொரோனா இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பங்களிப்புதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
அண்மைச் செய்தி: அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக உக்ரைன் குற்றச்சாட்டு
தெலுங்கானவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியிருப்பதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறிய அவர், மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். குடியரசு தலைவர் பதவிக்கு தமது பெயர் பரீசிலிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், தான் ஒரு சாதாரண குடிமகன்தான் என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








