32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

வெற்றிமாறனுடன் மீண்டும் ஒருமுறை!!- சூரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

‘விடுதலை – பாகம் 2’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொள்கிறார்.

மல்டி ஸ்டார் நடிப்பில் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கிறார்.

இதையும் படியுங்கள் : அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

துரை செந்தில்குமார் – வெற்றிமாறன் – சூரி – சசிகுமார் – உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு!

Web Editor

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 முதல் விண்ணப்பிக்கலாம்: பொன்முடி

Gayathri Venkatesan

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள்!

Saravana