விநாயகர் சதுர்த்தி பண்டிகையான இன்று பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்த நிலையில், ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு விற்பனையானது.
பண்டிகைக் காலம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் பூக்களின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதன்படி புரட்டாசி மாதத்தின் முதல் நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையான இன்று தமிழகத்தில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது. அதிலும் மல்லிகைப் பூ விலை உச்சபட்சமாக உயர்ந்து காணப்பட்டது.
கடந்த வாரம் வரை 500 ரூபாய்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ விலையில் இன்று 1000 ரூபாய அதிகரித்து ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இருநூறு ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சம்பங்கிப்பூ இன்று நானூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை, சாமந்தி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.







