தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு…

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், நாவலூரில் ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது அதில் ஒருவருக்கு ஒமைக்கிரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களுடைய தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தத் தொற்றும் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இருவரும் குணம் அடைந்து விட்டனர்” என்றும் கூறினார். மேலும் வரும் 12 தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.