முக்கியச் செய்திகள் இந்தியா

‘ஓமிக்ரான்’ அச்சுறுத்தல்; பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச பயணிகளுக்கு புதிய விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து, முழு ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய 11 நாடுகள் ஆபத்து பட்டியலில் உள்ளன. இந்த நாடுகளிலிருந்து இந்தியா வரும் பணிகளுக்கு RT-PCR கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் ‘நெகடிவ்’ முடிவு வந்தபின் அவர்கள் 7 நாட்கள் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். 8வது நாள் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த இடைப்பட்ட நாட்களில் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்ட நபரின் வீடுகளுக்கு சென்று அவர் தனிமைப்படுத்தலில்தான் உள்ளாரா என்பதை உறுதி செய்வார்கள்.

ஒருவேளை பயணிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார். அவரது பரிசோதனை மாதிரிகள் ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு பரிசோதனையை மேற்கொள்ளும் INSACOG பரிசோதனைக்கூடம் உட்பட அரசின் தொடர்பில் உள்ள அனைத்து பரிசோதனைக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படும்.

தொற்று உறுதி செய்யப்பட்ட பயணியுடன் தொர்பில் இருந்தவர்களை 14 நாட்கள் வரை மாநில அரசு தொடர்ந்து கண்காணிக்கும். இந்த விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வோடும் அனைத்து தரை, வான், கடல் வழி நுழைவுகளையும் தீவிர கண்காணிப்பு உட்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல ‘பரிசோதனை, தடமறிதல், சிகிச்சையளித்தல், தடுப்பூசி செலுத்துதல்’ எனும் செயற்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ் RT-PCR மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளில் இருந்து தப்ப முடியாது என்பதால், தொற்றைக் கண்டறிய இதுவரை பயன்படுத்தப்பட்ட சோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவண்ணாமலை தீபத்திருவிழா; பரணி தீபம் ஏற்றப்பட்டது

Halley Karthik

தவறி விழுந்ததில் வெடித்த வெடிகுண்டு: ரவுடி பலத்த காயம்!

Web Editor

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் உத்தரவு

Jayasheeba