முக்கியச் செய்திகள் இந்தியா

அதிநவீன ட்ரோன்களை கொள்முதல் செய்த இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்திய ராணுவம் புதிதாக ட்ரோன்களை இறக்குமதி செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து எல்லைப்பகுதியில் தனது கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு இடையே இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், நவீன ட்ரோன்களை இந்திய ராணுவம் இறக்குமதி செய்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நவீன ட்ரோன்கள் இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த வகை ட்ரோன்கள் 52 மணிநேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவையாகும். அதேபோல 10.5 கி.மீ சுற்றளவு வரை இந்த ட்ரோன் பயணிக்கும். 35,000 அடிவரை பறக்கும் திறன் கொண்டுள்ளது. ட்ரோன் ஜாமர் பொருத்தப்பட்ட பகுதிகளிலும் இது தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.

இவைகள் அவசர கொள்முதல் விதியின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.500 கோடிகளில் போர் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நவீன கருகளை கொள்முதல் செய்வதன் மூலம் சீனாவின் அச்சுறுத்தல்களை எளிதாக சமாளிக்க முடியும் என்று இந்திய பாதுகாப்புத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் கொரோனா தொற்று; புதிய கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு

Saravana Kumar

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: உதயநிதி ஸ்டாலின்

Halley Karthik

ஏடிஎம் கொள்ளை: பண இருப்பை கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்

Vandhana