ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் விளையாட்டு

ஒலிம்பிக் ஜோதியின் வரலாறு: ‘ஹிட்லரின் பங்கு’


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் தேதி, இடம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டாலும், அறிவிப்புக்கு முன்பு ஏற்றப்படும் ஜோதியே போட்டி தொடங்குவதை உறுதி செய்யும். ஜோதி ஏற்றப்பட்டாலே ஒலிம்பிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன என்று தான் அர்த்தம்.

இந்த ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவதன் பின்னணி என்ன? யாரால்? எப்போது முதல் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பண்டைய காலத்தில் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒருமுறை கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் உள்ள “ஜீயஸ் சரணாலயத்தில்”போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. போட்டிகள் தொடங்கி நிறைவு பெறுவது வரை, ஜோதி ஏற்றப்பட்டு, அது அணையாது எரிந்து கொண்டிருக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை அம்மக்கள் புனிதமாகவும் கருதியிருக்கின்றனர். ஆனால், அதற்கு மேலும் சிறப்புக் கூட்டும் வகையில், ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் ஆட்சியில் தான்.

1936ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அன்றைய ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர், ஒலிம்பிக் தொடர்பான சடங்கில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டார். அந்த ஒலிம்பிக்கின் மூலம் உலகையே ஜெர்மனியின் பக்கம் திரும்பி பார்க்க வைக்க நினைத்த ஹிட்லர், அதன் விளம்பரத்திற்கு நிதிகளை வாரி வழங்கி உள்ளார். மேலும், மக்களை கவருவதற்காக, ஒலிம்பிக் ஜோதி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. வால்டர் லெம்கே என்னும் சிற்பியின் உதவிக்கொண்டு, 27 செ.மீ உயரம் கொண்ட, மரத்தால் ஆன ஒரு ஜோதியும், உலோகத்தால் ஆன ஜோதிகளையும் வடிவமைத்துள்ளனர். கிரேக்கக் கடவுள்கள் மீது ஹிட்லர்க்கு உள்ள பற்றும், கிரேக்கர்கள் வழிபாட்டில் “நெருப்பு” ஒரு அங்கம் வகித்ததுமே, இந்த ஜோதி உருவாவதற்குக் காரணமாக பேசப்பட்டது.

இந்த முதல் ஒலிம்பிக் ஜோதி, 1936 ம் ஆண்டு ஜூலை 20 அன்று கிரேக்கத்தின் ஒலிம்பியாவில், ஒரு கண்ணாடியால் சூரியக் கதிர்களைக் ஓரிடத்தில் குவித்து,ஒலிம்பிக் ஜோதி பற்றவைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஜோதியை முதன் முதலில் கையில் ஏந்திச் சென்ற நபர், கிரேக்கத்தச் சேர்ந்த தடகள வீரர் கான்ஸ்டான்டின் கோண்டிலிஸ் தான். கிரீஸ், பல்கேரியா, யூகோஸ்லாவியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாக்கியா என, பல வீரர்களால் ஏந்தப்பட்டு வந்த இந்த ஜோதி, 12 நாட்களுக்குப் பிறகு ஜெர்மனியை வந்தடைந்தது. ஜெர்மன் ஆயுத உற்பத்தி நிறுவனம் க்ரூப்பின் சின்னமானது அந்த ஜோதியில் பதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அன்று தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் பழக்கம், அடுத்து வந்த ஆண்டுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது. கோடைக்கால ஒலிம்பிக்கிற்கான ஜோதியானது எப்போதும் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் எரியூட்டப்படுகிறது. ஆனால், குளிர்காலத்தில் அங்கே எரியூட்டப்படுவதில்லை. 1952 மற்றும் 1960 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு, நார்வேயில் எரியூட்டப்பட்டது. 1956 குளிர்கால போட்டிக்காக இது ரோமில் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் தான், 2020 நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா பெருந்தொற்றால் 2021ம் ஆண்டிற்கு மாற்றப்பட்டது. இரண்டாம் அலை காரணமாக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, சாலைகளில் ஜோதி ஓட்டத்தைத் தவிர்ப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்தது. எனினும், வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, போட்டிகள் தொடங்கப்பட உள்ளது… இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் மூலம் கோடிக்கணக்கானோர் பார்க்க காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொதுக் குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor

கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

EZHILARASAN D

சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ

Halley Karthik