சென்னை காசிமேட்டில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 6 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
காசிமேடு, காசிமாநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம் கடலுக்கு சென்றுவிட்டதால், மனைவி அந்தோணி மேரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையே, பக்கத்து தெருவில் வசிக்கும் மகள் சுபா, அந்தோணி மேரிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அந்தோணி மேரி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
அவர் மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 6 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement: