பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துள்ள ஆதிரா கதாபாத்திரத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான கே.ஜி.எப். திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ஆதிரா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார்.
இப்படத்தை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, கொரோனா ஊரடங்கின் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளிவைத்தது. இருப்பினும் இந்த படத்தின் புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
https://twitter.com/prashanth_neel/status/1420602502903341056
இந்நிலையில், இன்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆதிரா கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








