முக்கியச் செய்திகள்

சச்சி சாரின் வாக்கு பளித்தது – பழங்குடியினப் பெண் நஞ்சம்மா நெகிழ்ச்சி

தனது குரல் வளத்தால் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் தன்பக்கம்
ஈர்த்து தேசிய விருதை அலங்கரிக்கும் இயற்கையின் இசை மகள் 60 வயது நஞ்சம்மா குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்…

ஒரு சிறிய ஈகோ மோதல் எந்த அளவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் அய்யப்பனும் கோஷியும் படத்தின் கதை. இந்தக் கதையை அட்டப்பாடி பழங்குடியின வாழ்வியலோடு, அவர்களது கலாச்சாரம், பண்பாட்டின் ஊடாக அழகாக திரைக்கதையை உருவாக்கியிருப்பார் இயக்குநர் சச்சி. இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் , பிரித்விராஜ், பிஜிமேனன் யாருன்னு அம்மாவுக்கு தெரியுமா? என ஒரு பழங்குடியின பெண்ணிடம் கேட்பார், அவர் தெரியாது என சிரித்து பதில் அளிப்பார். அந்த தமிழ் பழங்குடியின பெண்தான் நஞ்சம்மா!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர், பாடும் நாட்டர் பாடலான ‘களக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்திருக்கு
பூப்பறிக்க போகலாமோ, விமானத்த பார்க்கலாமோ.. லாலேலே லாலா லே லாலே லே லா லே லாலேலே லாலா லே லாலே லே லா லே என்ற பாடல் குறித்து நஞ்சம்மா பேசும்போது, எப்போதாவது சந்தனமரக் காட்டின் மேலே வானத்தில் பறந்து மறையும் விமானத்தைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்ட தான் இட்டுக்கட்டிப் பாடிய பாடல். இதிலிருக்கும் மெட்டு எனது முன்னோர்களுடையது” என்றார்.

தமிழகமும், கேரளாவும் மேற்கு மலைத்தொடர்ச்சியில் இணையும் இடத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்குதான் அட்டப்பாடி. நஞ்சம்மா தமிழகத்தில் கோபனாரியில் பிறந்து, கேரளா, அட்டப்பாடி நாக்குபத்தி கிராமத்திற்கு வாக்குபட்டுச் சென்றார். அந்த
பகுதியில் இருக்கும், ஆசாத் கலா சமிதி என்கிற நடன இசைக்குழுவில்
உறுப்பினரானவர், கேரளா மற்றும் பிற மாநிலங்களில் நடக்கும் கச்சேரிகளிலும்
நஞ்சம்மா பங்கேற்று பாடியுள்ளார். அய்யப்பனும் கோஷியும் படம் அட்டப்பாடியில் உருவாக்கப்பட்ட போதே, இயக்குநர் சச்சி, அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரையேனும் ஒருவரை பாடவைக்க முடிவு செய்தார். அப்படித்தான் நஞ்சம்மாவின் குரலில் அவர் பாடக்கேட்கவும் அந்த படத்துக்காக ஓகே செய்யப்பட்டார். பாடல் பதிவு சென்னையில்தான் நடந்தது. அப்போது காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு நஞ்சம்மா, பாடியபோது ரிதம் சரியாக வரவில்லை. இதனால் பாட வைத்து, பின் டெம்போவை இசைக்கு தகுந்தாற்போல், மாற்றிக்கொண்டதாக இசையமைப்பாளர்
ஜேக் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில்
‘அய்யப்பனும்,கோஷியும்’ என்ற படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது மறைந்த
இயக்குநர் சச்சிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருதை பிஜு மேனன் பெற
இருக்கின்றனர். மேலும், சிறந்த பாடகருக்கான விருதை நஞ்சம்மாவும் பெற
இருக்கிறார். இவ்விருது குறித்து நஞ்சம்மா நம்மிடம் பேசும்போது, விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எல்லா மக்களுக்குள்ளும் நான் இருக்கிறேன். எனக்கு விருது கிடைக்க காரணமாக அனைத்து மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.

நான் யாருன்னு தெரியாதப்ப, கண்டிப்பாக நீ எல்லோருக்கும், தெரிவேன்னு, சொன்ன
இயக்குநர் சச்சி சாரோட வாக்கு பளித்திருக்கிறது. அவர் எனக்கு கடவுள். இந்த
மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தவர். அவர் இருந்து பார்க்க வேண்டியது,
மறைந்துவிட்டார். அவர் என்னுள்ளே இருக்கிறார். இந்த விருதை வைத்து, அவராகவே
பார்ப்பேன் என்றார். இருந்தாலும், இறந்தாலும் சச்சி சாரை நான் பார்ப்பது போல
நீங்களும் என்னை பார்ப்பீர்கள். உங்கள் மனதில் நான் இருக்கிறேன். என் மனதில்
நீங்கள் இருக்கிறீர்கள், அனைவரும் நன்றாக இருக்க கடவுள் அருள் கிடைக்கட்டும். தனது பழங்குடியின சமூகம் மேம்பட நாளைய தலைமுறையை உருவாக்க தங்களது சமூகத்தின் பங்கும் இருக்கும். அதற்கு பழங்குடியின மக்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த களம்கான வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

தற்போது நஞ்சம்மாளை பார்க்க உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள்
என பல்வேறு தரப்பினரும், சமூகப் பணியில் உள்ளவர்களும் அவரது வீட்டிற்கு வந்து
அவரை வாழ்த்தி செல்கின்றனர். அட்டப்பாடியின் அடையாளமாகவும், பழங்குடியின மக்களின் அங்கீகாரமாகவும் உள்ள நஞ்சம்மாள் தேசிய விருதைப் பெறுவதில் அந்த பகுதி மிக்க மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-செந்தில் குமார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க கூடாது – வன ஆர்வலர்கள் கோரிக்கை

Web Editor

தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி

EZHILARASAN D

2வது டி20 போட்டி; 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

G SaravanaKumar