முக்கியச் செய்திகள் விளையாட்டு

சச்சின், விராட் கோலி வீடியோ வெளியிட்ட விம்பிள்டன்

கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியும் டென்னிஸ் போட்டியை ரசித்து பார்க்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், லண்டனில் உள்ள விம்பிள்டன் மைதானத்தில், இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் அருகருகே அமர்ந்து, கண்டுகளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இரண்டு நட்சத்திர வீரர்களுக்கும் விம்பிள்டன் மைதானம் புதிதல்ல என தலைப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியும், டென்னிஸ் போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். எனினும், இது 2015-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின் போது எடுக்கப்பட்டதாகும்.

Advertisement:
SHARE

Related posts

பதிவுத்துறையில் முறைகேடு: விரைவில் விசாரணை – அமைச்சர்

Halley karthi

ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; ஓ.எஸ்.மணியன்

Saravana Kumar

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறதா?

Saravana