முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒளிப்பதிவு திருத்த மசோதா: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அண்மையில் ஒன்றிய அரசு 1952 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை செய்து ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021-ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரைவுச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு, திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.12 லட்சம் கோடி

Saravana Kumar

வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!

Halley karthi

கழிவறையில் வசித்து வந்த தம்பதியினருக்கு, மு.க.அழகிரி நிதியுதவி!

Niruban Chakkaaravarthi