முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல்நிலைய மரணங்களை பதிவு செய்வதில் அதிகாரிகள் அலட்சியம்

காவல் நிலையம் மரணங்களை பதிவு செய்வதில் அதிகாரிகள் மத்தியில் அலட்சியம் இருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் அருண் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

சென்னை வாலஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு அரசு துறை அதிகாரிகளுடன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் அருண் குமார் மிஸ்ரா கலந்தாய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆணைய உறுப்பினர்கள், நீதிபதி மகேஷ் மிடல் குமார், தியானேஷ்வர் மனோகர் முள்ளே, தேவேந்திர குமார் சிங், ஹரிஷ் சந்திர சவுத்ரி ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல் தமிழ்நாடு சார்பில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கர், ஆணைய இயக்குனர் மகேந்திர குமார் ரத்தோர், ஆணைய உறுப்பினர்கள் ஜெயசந்திரன், சித்தாரஞ்சன் மோகன் தாஸ் , தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சிறைத்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலந்தாய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேசிய மனித உரிமைகள் ஆணைய
தலைவர் அருண் குமார் மிஸ்ரா, மனித உரிமைகள் சார்ந்த வழக்குகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொகை, மனித உரிமை கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


மனித உரிமைகள் விவகாரத்தில் மாநில அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள்
மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த கலந்தாய்வு கூட்டம் மிகவும் சுமூகமாக நடந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மனித உரிமைகள்
மீறல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர் தமிழ்நாட்டில் மாநில
மனித உரிமை ஆணையம் அது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதாகவும் மனித உரிமைகள் மீறும் வகையில் நடக்கும் சம்பவங்களை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

காவல் நிலைய மரணங்கள் நடைபெறும் போது அதை பதிவு செய்வதில் அதிகாரிகள்
மத்தியில் அலட்சியம் இருப்பதாக தெரிவித்தார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் காவல் நிலைய மரணங்களில் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அது போன்ற தரவுகள் தங்களிடம் இல்லை, அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் இதில் உயிரிழப்பதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்

EZHILARASAN D

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

Halley Karthik

சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

G SaravanaKumar