‘வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை’

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ அரவிந்த ரமேஷ் சோழிங்நல்லூர் தொகுதியில் சிஎஸ்ஆர்…

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ அரவிந்த ரமேஷ் சோழிங்நல்லூர் தொகுதியில் சிஎஸ்ஆர் நிதியில் நியாயவிலைக் கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 130 நியாய விலைக்கடைகளில் 101 கடைகள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: தமிழிசைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே அதிகமாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில், நியாய விலைக்கடைகள் கட்டுவதற்கு சிஎஸ்ஆர் நிதியைப் பெற்றுத்தர வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.