ஆதி இசை, தமிழ் இசையாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழிசைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கும் எனவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இசைப்பள்ளி தொடங்க வேண்டும் என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இசைப்பள்ளி, 4 கல்லூரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையை பொறுத்து வரும் காலங்களில் இசைப் பள்ளி தொடங்கப்படும் என கூறினார். மேலும், ஆதி இசை, தமிழ் இசையாகத்தான் இருந்திட வேண்டும் என்றும், தமிழிசைக்கான உரிய முக்கியத்துத்தை அரசு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விராலிமலையில் சாதகமான சூழல் இருந்தால் அங்கு இசைப்பள்ளி தொடங்கப்படுமா? என அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, சாதகமான சூழல் இருந்தால் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று அங்கு இசைப்பள்ளி தொடங்கப்படும் என்றும், நலிவுற்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







